தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும் / Thaivazhi Samoogam: Vazhvum Vazhipadum
தாய்வழிச் சமூகமாக பன்னெடுங்காலமாக தன் இயல்பில் மாறாது வாழ்ந்து வளர்ந்து வரும் தமிழ்ச்சமூகத்தின் கட்டமைப்பானது, பெரும்பாலும் பிரபஞ்ச உற்பத்தியின் இயக்க அடிப்படைக் கோட்பாடுகளை நன்கு உள்வாங்கி கொண்டதால் தான் உறுதிபெற்றது என்பதனை இந்நிலத்தில் காலந்தோறும் நிகழ்ந்து வரும் வழிபாட்டு சடங்குகள் மட்டுமின்றி அதன் கலை மற்றும் பண்பாட்டு ரீதியாகவும் நன்குணர முடிகிறது. உலகம் முழுமையும் தாய்வழிச் சமூகமாக இருந்து பின் வீரயுகத்திலும், உபரி உற்பத்தியாலும் தந்தைவழிச் சமூகமாக மாறிய நிலையிலும் அதன் தொல் நிலையை விடாது கைக்கொண்ட ஒரு சில குறிப்பிட்ட சமூகங்களில் தமிழ்ச் சமூகம் முதன்மையானது. அந்த நிலைப்பாட்டை இந்நூல் கலை வரலாற்று அடிப்படையிலும், இலக்கியங்களின் வாயிலாகவும் விளக்குகின்றது.
தாய்வழிச் சமூகம், காலப்போக்கில் தந்தைவழிச் சமூகமாக மாறியபோதிலும், தாய்வழிச் சமூகத்தில் தாய் பெற்றிருந்த முதன்மையை, அதன் நெறியை, நிலைத்த தன்மையை இன்றும் முழுமுதற் எச்சங்களாக பரவலாக பேரரசின் பெருங்கோயில்கள் முதல் பல்குடிகளின் வழிபாடுகள் வரை காணமுடிகிறது. இந்நிலையில் அந்த தொன்ம சடங்கு மற்றும் வழிபாட்டு நிலையிலும், கலைகளிலும், அகழ்வுகளில் கிடைக்கும் தொல் பொருட்களிலும் காணப்பெற்றமையை தொகுத்தும், விளக்கியும் தாய்வழி சமூகத்தின் உயர்நனி சமூகமாக தமிழ்ச்சமூகம் விளங்கியது என்பதை தாய்த்தெய்வ வழிபாடு, வளமைச்சடங்குகள் மற்றும் சமூகத்தில் பெண்மையின் நிலையைப் போற்றியிருந்த தன்மை ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் தரவுகளையும், சங்க இலக்கிய கொற்றவைப் பாடல்களையும் ஒப்பியல் ரீதியில் பொருந்திக்காட்டுவது உள்ளிட்ட பல்வேறு தாய்வழிபாட்டுப் பொருண்மைகளை சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள் மூலமாகவும் இந்நூல் எடுத்தியம்புகிறது
CLICK HERE PDF ;-தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்
0 تعليقات