Header Ads Widget

தென்னாட்டு ஜமீன்கள் முத்தாலங்குறிச்சி-காமராசு-FREE PDF







           தென்னாட்டு ஜமீன்கள் முத்தாலங்குறிச்சி-காமராசு




நெல்லைச் சீமையில் எங்குப் போய் பார்த்தாலும் ஏதாவது பழைமை நிறைந்து கிடக்கும். நெல்லைச்சீமைக்குள் எந்த இடத்தில் சென்று ஆய்வு செய்தாலும் அங்கே ஒரு வரலாறு புதைந்து கிடக்கும். சொல்லப்போனால், ஆலயத்தில், ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தில், அருவியில், மலையில், கடலில், தேரிக்காட்டில் என அனைத்திலுமே நெல்லைச்சீமை வரலாற்றுப் பொக்கிஷம் நிறைந்த பூமி. நாங்கள் தூசி தட்டி எடுத்த வரலாற்றில் நெகிழ வைத்ததும் நெஞ்சை நிறைய வைத்ததும் ஜமீன்கள் வரலாறுகள் தான். மாடமாளிகையாக இருந்த இடத்தில் ஒரு சிறு சுவர் மட்டுமே மீதமாக இருந்து ஜமீன் வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கும். இது நெகிழ்ச்சி, சாபங்களால் அழிந்த ஜமீனின் வரலாறுகள். தற்போதும் அங்குள்ள முதியவர்கள் எங்களைப் பார்த்து ஆர்வத்தோடு கதை சொல்லும்போது எங்களுக்கு மனநிறைவு. 


சிறிது காலம் கழித்து நாங்கள் அவர்களைப் பார்க்கப் போயிருந்தாலும் கூட அந்த முதியவர்களோடு வரலாறுகள் மண்ணோடு மண்ணாகி விடுமோ என்ற அச்சமும் எங்களிடம் இருந்தது.












விடுதலை போராட்டமாக இருந்தாலும், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தாலும், அதற்கும் முன் பாண்டிய மன்னர்கள் ஆதரவாகக் குறுநில மன்னர்களாக இருந்தாலும் சரி; அவர்களுக்குள் ஒரு வரலாறு ஒளிந்து கிடக்கிறது. குறுநில மன்னர்கள்தான் ஜமீன்தார்கள் ஆனார்கள். இவர்களிடம் பக்தி இருந்தது. கல்விப் பணி இருந்தது. தமிழ்ப்பற்று இருந்தது. இந்த மகத்துவம் வாய்ந்த ஜமிந்தார்களைப் பற்றிய நூலே இது.

உள்ளே.......

1. பாளையங்கோட்டையும் பாளையக்காரர்களும்
2. மறவர் ஜமீன்தார்கள்
01. ஊர்க்காடு
02. ஊத்துமலை
03. சிவகிரி
04. சொக்கம்பட்டி
05. நெல்கட்டும் செவ்வல்
06. தலைவன் கோட்டை
07. சுரண்டை
08. கடம்பூர்
09. கொல்லங்கொண்டான்
10. சேத்தூர்
11. மணியாச்சி
12. சிங்கம்பட்டி
3. நாயக்கர் ஜமீன்தார்கள்
01. எட்டயபுரம்
02. பாஞ்சாலங்குறிச்சி
03. சாப்டூர்
4. மற்ற ஜமீன்தார்கள்
01. குளத்தூர் ( பிள்ளை)
02. நட்டாத்தி ( நாடார்)
03. சாத்தான்குளம் (பறையர்)














Post a Comment

0 Comments