இந்தியா சீனா போர் (1962) காரணங்களும் விளைவுகளும்-
INDIA CHINA WAR (1962) CAUSES AND CONSEQUENCES -PART 1
ஜவாஹர்லால் நேரு வடிவமைத்த இந்திய அயலுறவுக் கொள்கையின் மிக முக்கியமான அம்சம் சீனாவுடனான நட்புறவு. அன்றைய உலகம் கம்யூனிஸ நாடுகள், கம்யூனிஸ எதிர்ப்பு நாடுகள் என மிகத் தெளிவாக இரண்டாகப் பிரிந்துகிடந்தது. நேரு இந்த இரண்டில் எந்தவொன்றுடனும் அணி சேராமல் விலகி நின்றார். ராணுவத்தில் சுயசார்பு, வெளியுறவுக் கொள்கையில் சுதந்தரமான செயல்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை சாத்தியப்பட சீனாவுடனான நட்பும் வடக்கு எல்லையில் அமைதியும் அவசியமென முழுமையாக நம்பினார். ஆனால் சீனாவுடனான போர் நேருவின் கொள்கைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. அதோடு நேருவின் அரசியல் செல்வாக்கும் வலுவிழந்துபோனது.
இந்திய எல்லைகள் ஒரு வரலாற்று அறிமுகம் (Indian Borders A Historical Introduction):
ஒன்றுக்கொன்று தொட்டுக்கொண்டிருக்கும் வகையில் இரு நாடூகளைப் பிரிக்கும் பொது எல்லைக்கோடு என்பது பண்டைய காலங்களில் காணப்படாத நவீன கருதுகோளாகும். ஆசிய நாடுகளில் ஐரோப்பியர்களின் அழுத்தம் காரணமாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இப்படியான எல்லைக்கோடுகள் உருவாக்கப்பட்டன அதற்கு முன்புவரை ஆசிய நாடூகளில் அப்படியான பொது எல்லைக்கோடு இருந்திருக்கவே இல்லை
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியா முழுவதும் பரவி இந்திய இதபகற்பகத்தின் வடக்கு எல்லையான பிரமாண்ட இமயமலைத் தொடர்வரை விரிந்து சென்றது. அங்கு இன்னொரு பெரும் சாம்ராஜ்ஜியமான சீனாவை எதிர்கொள்ள நேர்ந்தது.
ஆனால், அந்த எல்லைப் பிராந்தியத்தின் மத்திய பகுதிகளில் சிறு சிறு நாடுகள் இருந்தன. அவை அந்த எல்லைப் பகுதிகளில் ஆகுிக்கத்துக்காகப் போரிட்டு வந்தன . வட மேற்கு மற்றும் வட கிழக்கு எல்லைப் பகுதிகளில் மோதலைத் தவிர்க்க உதவும் இடை மண்டலமாக எந்தச் சிறு நாடும் இல்லை. எனவே,
பிரிட்டிஷ் அரசு அந்த எல்லைகளில் சீனாவுடன் எந்த மோதலும் ஏற்படாமல் இருக்கத் தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லைகள் இருந்தாகவேண்டும் என்று முடிவெடுத்தது. ஆனால் பிரிட்டிஷ் அரசால் அதைச் சாதிக்க இயலவில்லை. அந்தத் தோல்வியே 1960களில் இந்திய - சீன எல்லைப் போருக்கு வழிவகுத்தது.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவும் சீனாவும் சுதந்தர நாடுகளாக ஆனபோது, இமயமலையின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளே இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் பிராந்தியங்களாக இருந்தன. இந்தப் பிராந்தியங்களைத் தெளிவான எல்லைக் கோடூகளாக்கும் முயற்சிகளில் தோல்வியே கிடைத்தது. அதனாலேயே இரு நாடூகளுக்கும் இடையில் சண்டை மூண்டது.
பிரிட்டிஷ் இந்திய எல்லைகள்:(british india borders ):
விரிவடைந்து வரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் எல்லையானது வட மேற்கிலுள்ள ஹிந்துகுஷ் மற்றும் காரகோரம் மலைத்தொடர்களை நெருங்கிய அதேவேளையில் அதே பகுதிகளை நோக்கி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த ரஷ்யாவும் மறு பக்கத்திலிருந்து முன்னேறிவந்தது. ஓர் ஆக்கிரமிப்பு இன்னொரு ஆக்கிரமிப்புக்கான அவசியத்தை ஏற்படுத்தும் என்ற அம்சமே இரு நாட்டூ விஸ்தரிப்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருந்தது
ரஷ்யா இந்திய எல்லைகளை நெருக்கவே முடியாதவகையில் பிரிட்டிஷ் படைகள் தாமாகவே இந்திய எல்லைப் பகுதிகளைத் தாண்டிச்சென்றுரஷ்யாவை அந்தப் பகுதியிலேயே தடூத்து நிறுத்தவேண்டும் என்பது கருத்து. இதற்கு மாறாக மிதவாதப் பிரிவோ அப்படியான தொலைதூரப் பகுதிகளில் தமது படைகளை நிறுத்துவதில் இருக்கும் சிரமத்தையும் பொருளாதாரச் செலவுகளையும் கருத்தில் கொண்டு வேறொரு வழியைச் சொன்னது.
பிரிட்டிஷ் சிங்கத்துக்கும் ரஷ்யக் கரடிக்கும் இடையிலான மோதலைத் தடூக்க இரண்டுக்கும் நடுவே வேறொரு விலங்கைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும் என்று கூறியது. அப்படியான மூன்றாம் நபர் நாடுகளாக ஆஃப்கானிஸ்தான், குட்டி ராஜ்ஜியமான ஹன்ஸா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அப்படி இருக்கச் செய்யலாம்.ஆனால், பிரிட்டன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே அந்தப் பகுதிகளில் தங்கள் ஆகுிக்கத்தை சீனாநிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே, சீனாவை அந்த விஷயத்திலஉதவும்படிக் கேட்டுக்கொள்ளவேண்டுூம் என்று மிதவாத பிரிட்டிஷார் கருதினார்கள். ஆனால் பிரிட்டிஷாருக்கு அந்த முயற்சியில் தோல்வியே கிடைத்தது. ஏகாதுபத்தியங்கஞளுடனான எல்லை ஓப்பந்தங்கள் என்பவை கத்தி முனையில் நடப்பதைப் போன்றது. எந்த நேரத்திலும் சீனாவின் பகுதிகள் ஏகாதிபத்திய நாட்டால் ஆக்ஐரமிக்கப்பட்டுவிடக்கூடும் என்ற பாடத்தை ரஷ்யாவுடனான அனுபவத்தில் சீனா தெரிந்து கொண்டிருந்தது. எனவே பிரிட்டனுடன் பொது எல்லையைப் பகிர்ந்துகொள்வதில் சீனா ஆர்வம் காட்டவில்லை
ஆஃப்கானிஸ்தானுடனான எல்லை : ட்யூரண்ட் எல்லைக் கோடூ்
1880-ல் ஆஃப்கானிஸ்தானைக் கைப்பற்ற லண்டன் மேற்கொண்ட முயற்சிகள் சிக்கல்களுக்கே, குறிப்பாக இரு போர்களுக்கு வழிவகுத்தன. முதலாவது அதிக எண்ணிக்கையில் ராணுவத்தைக் குவிக்கவும் அதைப் பராமரிக்கக் கடுமையான செலவுகளையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
ஆஃப்கானியர்கள் அந்தப் பகுதிகளில் இருந்தபடியே இந்தப் பக்கம் ஊடூருவி வந்து பெஷாவர் மற்றும் சிந்து பகுதிகளை எப்போது வேண்டுமானாலும் தாக்கிவிடமுடியும். எனவே, அந்த பதான் பகுதிகள் மீதான ஆஃப்கானிஸ்தானின் உரிமையை முடிந்தவரை அப்புறப்படுத்தியாகவேண்டும் என்று பிரிட்டன் முடிவு செய்தது.
இமயமலையின் உச்சிப்பகுதிகளில் பிரிட்டிஷ் அரசு ஒரு எல்லைக்கோட்டை வரைந்தது. 1893-ல் ஆஃப்கன் அமீர் அந்த எல்லைக்கோட்டை ஒப்புக்கொண்டு ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்குட்டார். ட்யூரண்ட் என்னும் ஆங்கிலேயர் அந்த எல்லைக்கோட்டை நிர்ணயிக்க உதவியதால் “ட்யூரண்ட் எல்லைக் கோடூ் என்று அவரது பெயரே சூட்டப்பட்டது.
பிரிட்டிஷ் இந்திய காஷ்மீரின் எல்லை: BORDER OF BRITISH INDIA KASHMIR
1846-ல் சீக்கியர்களுடன் நடந்த முதல் போரில் கிடைத்த வெற்றிக்கனிகளில் ஒன்றாக காஷ்மீர் பிரிட்டன் வசம் வந்துவிட்டது. இருப்பினும் காஷ்மீரைத் தன்னுடன் இணைத்துக்கொள்ளாமல் பிரிட்டன் அதை “வடக்கு எல்லையின் பாதுகாவலராக” நியமித்தது. பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைத்துக்கொண்டால் செலவும் பொறுப்பும் அதிகமாகும் என்ற காரணத்தால் பிரிட்டன் அப்படி அதனடிப்படையில் உள்ளூர் தோக்ரா சமூகத்தைச் சேர்ந்த குலாப் சிங்கை ஜம்முவின் ஆளுநராக பிரிட்டிஷ் அரசு நியமித்தது. இவர் ஏற்கனவே சீக்கியர்கள் ஆட்சியில் ஆளுநராக இருந்தவர்தான். சீக்கியர்களின் தோல்வியைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆதரவாளராக மாறியதால், அதற்குப் பரிசாக அவருக்கு பிரிட்டிஷ் அரசு ஆளுநர் பதவியை வழங்கியது.
அப்படியாக, பிரிட்டிஷ் அரசு ஜம்மு - காஷ்மீர் என்ற பெயரில் புதியமாநிலத்தை உருவாக்கியது. முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்து மன்னரை நியமித்து இரு பிரிவினருக்கு இடையே கசப்பின் விதையை விதைத்தது. அப்படியாக எல்லை சார்ந்த விழிப்பு உணர்வு மிகுந்த கர்சன் பிரபு, “இமயத்தின் இதயத்துக்குள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் எல்லையை நீட்டித்துக் கொண்டுசென்றோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
காஷ்மீர் உடன் லடாக், அக்சாய் சின் இணைப்பு:
கடல் மட்டத்தில் இருந்து 12000 அடி உயரத்தில் சிந்து நதி கர மேல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சிறிய நாடூ லடாக். 10 ஆம் நூற்றாண்டுவரை திபெத்தின் ஒரு பகுதியாக இருந்த அது, பிறகு தனி ராஜ்ஜியமாகப் பிரிந்துசென்றது .14 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அலை லடாக்கை நெருங்கியது. அப்போது தோற்றுப் பின்வாங்கினா லும், மீண்டும் 16 ஆம் நூற்றாண்டில் பெரும் படையுடன் வந்து தோற்கடித்து மொகலாய சாம்ராஜ்யத்துடன் அதை இணைத்துக் கொண்டது. மொகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து லடாக் மீண்டும் சுதந்திர நாடானது. ஆனாலும் பெளத்த நாடென்பதாலும், திபெத்தின் கலாசார, அரசியல் செல்வாக்குட்பட்டு இருந்ததாலும் வலிமையான ஆக்ரமிப்பு சக்திகள் வேறு ஏதும் இல்லாததாலும், 1834-ல் குலாப் சிங் படையெடூத்துச் சென்று லடாக்கை இணைத்துக் கொண்டார்.
அதோடூ நிறுத்தாமல் லாஸாவை பீகங்குக்கு பணியாமல் லாகூரூக்கு விசுவாசமாக நடக்கும்படிச் செய்தார். 1841 வசந்த காலத்தில் தோக்ரா படைகள் புனித ஏரிகளான ராகஸ் தல், மானசரோவர் உள்பட திபெத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றின. இதன் மூலம் காஷ்மீரக் கம்பளங்களுக்கான மூலப்பொருளான கம்பளி கிடைக்கும் துபெத்தியப் பகுதிகள் சீக்கிய அரசின் கட்டூப்பாட்டுக்கு வந்தன.
தோக்ரா படைத்தளபதி குளிர்காலத்துலும் திபெத்தின் உட்பகுதுகளுக்குள் படையெடுத்து செல்லும் தவறான முடிவை குலாப் சிந் எடுத்தார். இதனால் 12000அடி உயரத்தில் பனியால் சூழப்பட்டு ஆயிரக்கணக்கில் வீர்கள் மடிந்தனர். திபெத்தியர்கள் முன்னேறி வந்து லடாக்கை விடுவித்துக்கொண்டனர். ஆனால், குலாப் சிங்கின் புதிய படைகள் வந்து சேர்ந்ததையடூுத்து லே பகுதிக்கு முன்பாக நடந்த போரில் திபெத்தியர்கள் தோற்றனர்.
இப்படியாக, இரு தரப்பும் சரி சமமான வெற்றிகளைப் பெற்றிருந்ததால் 1842-- ல் இரு தரப்பினரும் அடுத்தவருடைய எல்லையை மதிக்கவேண்டும் என்று ஒரு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர். ஆனால், அந்த ஓப்பந்தம் எல்லை என்று எதையும் தெளிவாக வரையறுக்கவில்லை. “முற்காலத்தில் வழக்கில் இருந்த எல்லைகளை”: மதித்து நடக்கவேண்டும் என்றுபொத்தாம்பொதுவாகவே குறிப்பிட்டது.
குலாப் சிங்கின் பாதியில் முடிந்த படையெடூப்பை பிரிட்டிஷ் அரசு தீவிரமாகப் பரிசீலித்தது. சீக்கியர்கள் தமது பகுதியைத் தாக்கியது பிரிட்டிஷாரின் தூண்டுதலின் பேரில்தான் இருக்கும் என்று சீனா பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகள் மீது பதில் தாக்குதல் தொடுக்கக்கூடும் என்று பிரிட்டன் நினைத்தது. 1846-ல் ஜம்மு-காஷ்மீர் மன்னராக குலாப் சிங்கை பிரிட்டிஷ் அரசுதான் நியமித்திருந்தது. குலாப் சிங் மீண்டும் திபெத்தின் மீது படையெடூத்தால் நம் நிலைமை சிக்கலாடிவிடும் என்று பிரிட்டன் யோசித்தது. எனவே, பிரிட்டிஷாரின் சம்மதமின்றி குலாப் சிங் எந்தப் படையெடுப்பையும் மேற்கொள்ளக்கூடாதென்று அமிர்தசரஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து திபெத்துக்கும் லடாக்குக்கும் இடையே தெளிவான எல்லைக்கோடு வகுக்க முன்வந்தது. இதன் மூலம் இழக்குப் பகுதியில் எழும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமான நிச்சயமற்ற எல்லை என்ற விஷயத்துக்குத் தீர்வு கிடைக்குமென பிரிட்டிஷ் எதிர்பார்த்தது.
அக்சாய் சின் எல்லை : டபிள்யூ ஹெச் ஜான்சன்:
1846 - 1847-ல் ஆய்வு செய்து பேன்காங் ஏரிக்குச் சற்று வடக்கில் ஆரம்பித்து ஸ்பிடி ஆறு வரையான பகுதியை எல்லைக்கோடாக வரையறுத்தனர். வடக்குப் பக்கம் பேங்காங் ஏரி மற்றும் காரகோரம் கணவாய்க்கு இடைப்பட்ட பிரமாண்ட நிலப்பரப்பானது “மனிதர்கள் நடமாட்டமற்ற பகுதி. எனவே வடகழக்குப் பகுதியில் திபெத்தின் எல்லையைத் தெளிவாக வரையறுப்பது சாத்தியமில்லை என்று ஆய்வுக்குழுவில் இருந்த ஒர ஆணையர் கருத்துத் தெரிவித்தார். ஆனால் அன்றைக்கு
எதற்கும் பயன்படாத பகுதி என்றும், யாரும் சண்டை போடமாட்டார்கள் என்றும் ஒதுக்கப்பட்ட பிரமாண்ட நிலப்பரப்புதான், சுமார் நூறு வருடங்களுக்குப் பிறகு இந்திய -- சீன எல்லைப் பிரச்னையின் அடிப்படைக் காரணமாக விளங்கியது.
பேன்காங் ஏரிக்கும் காரகோரம் கணவாய்க்கும் இடைப்பட்ட அகண்ட இடைவெளியை ஒருங்கிணைத்து டபிள்யூ ஹெச் ஜான்சன் ஓர் எல்லையை உருவாக்கினார். 1865-ல் கோடான் என்ற இடத்துக்கு வருகைதந்த அவர், கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் உள்ள அக்சாய் சின் என்ற இடத்தை அடைந்தார்.
அக்சாய் சின் என்றால் “வெள்ளைக் கற்கள் நிறைந்த பாலைவனம் என்று பொருள். பனிப்புயலும் கடுங்குளிரும் நிறைந்த பகுதி என்பதால் எந்தப் பயிரும் விளையாது என்பதுடன் மனிதர்கள் வாழவே முடியாத இடமாகும். ஆனால், இந்தப் பகுதிதான் இருபதாம் நூற்றாண்டில் இந்தியக் குடியரசுக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையே பெரும் போருக்குக் காரணமானது.
ஆனால், தீவனங்களோ தங்குமிட வசதிகளோ எதுவும் இல்லாத, உயிரைக் குடிக்கும் பனிக்காற்று வீசும் கொடூரமான அந்த மலைப்பரப்பினூடாகத்தான் பல ஆயிரம் ஆண்டூகளுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆம். அதுதான் எல்லைகள் தாண்டி சீனாவையும் ஏனைய நாடுகளையும் இணைத்த பட்டுப் பாதை. கோடைக் காலத்தில்தான் பட்டு, உப்பு, கம்பளி, உள்ளிட பொருட்களுடன் இந்தப் பாதை வழியே அண்டை நாடூகளுடன் வர்த்தகம் நடைபெறும். பொருட்களைச் சுமக்கப் பனிப் பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் யாக் போன்ற விலங்குகள் பயன்படுத்தப்படும். அந்தப் பகுதியின் மிகக் குறுகிய கோடைக்காலங்களில் மதியவேளைகளில் பனி மலைகள் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே உருகிக் கிடைக்கும் நீரைக்கொண்டு அந்தப் பயணங்கள் மேற்கொள்ளப்படும்.
அக்சாய் சின் மற்றும் காரகோரம் கணவாய்க்கு வடக்கே உள்ள பெரும் பகுதியை ஆய்வு செய்த ஜான்சன் அவற்றை காஷ்மீருக்கு உள்ளடங்கிய பகுதிகளாகக் காட்டும் வரைபடத்தை 1868-ல் வெளியிட்டார்.
.
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போதும், அதற்குப் பல ஆண்டூகளுக்குப் பிறகும், வெளியான பெரும்பாலான இந்திய வரைபடங்கள் ஜான்சன்--அர்டக் வகுத்த எல்லைகளையே பிரதிபலித்தன.
0 تعليقات