முதல் குலோத்துங்க சோழன் -Story Of Chola Dynasty
In Tamil Pdf
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அந்நாட்டின் உண்மைச் சரித்திரம் தாய்மொழியில்
வெளிவருதல் பெருந்துணையாகும் என்பது அறிஞர்களது துணிபு.
முதல் குலோத்துங்க சோழன் -Story Of Chola Dynasty In Tamil Pdf
நம் தமிழகம் சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளையுடையதாக முற்காலத்தில் விளங்கிற்று. . இது குணபுலம் எனவும் வழங்கப்பெறும். சோழர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தலைநகரங்கள் உறையுர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. பிற்காலத்துச் சோழமன்னர்களது ஆட்சிக் காலங்களில் தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் தலைநகரங்களாகக் கொள்ளப்பட்டன. சோழர்களுக்குரிய அடையாள மாலை ஆத்தியாகும் ; கொடியும் இலச்சினையும் புலியாம்.
பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளிற் சோழருக்கும், மேலைச் சளுக்கியருக்கும் அடிக்கடி பெரும் போர்கள் நடைபெற்றன ; ஆனால், கீழைச் சளுக்கியர் சோழ மன்னரது பெண்களை மணஞ்செய்து கொண்டு அன்னோர்க்கு நெருங்கிய உறவினராய் நட்புற்று, வாழ்ந்து வந்தனர்.
முதலாம் இராசேந்திரசோழன்:
சோழநாட்டில் முதலாம் இராசராசசோழன் கி. பி. 1014-ல் விண்ணுலகெய்திய
பின்னர். அவனது புதல்வனாகிய முதலாம் இராசேந்திரசோழன் அரியணை ஏறினான்.
இவனைக் கங்கைகொண்டசோழனென்றும் வழங்குவர். இவனது ஆளுகையில் சோழமண்டலம்
ஈடும் எடுப்புமற்ற நிலையை யடைந்தது. மற்றைச் சோழமன்னர்களது ஆட்சிக்
காலங்களில் இச்சோழமண்டல இத்தகையதொரு சிறப்பும் பெருமையும்
எய்தவில்லையென்றே கூறலாம். இவ்வேந்தன் மண்ணைக்கடக்கம், ஈழம்,
இரட்டபாடிகோசலநாடு, உத்தரலாடம், தக்கணலாடம், வங்காளம், கடாரம்,
பப்பாளம், இலாமுரி தேசம் முதலான நாடுகளையும், கங்கையாற்றைச் சார்ந்த
சில பகுதிகளையும் வென்று,
பெரும் புகழுடன் விளங்கினான். இவன் வடநாட்டு வேந்தர்களை வென்று கங்கைநீர்
நிரம்பிய குடங்களை அவர்களுடைய தலைகளில் ஏற்றிச் சோழமண்டலத்திற்குக்
கொண்டுவரச்செய்து, திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பெரியதோர் ஏரி வெட்டு
வித்து அக்கங்கை நீரை அதில் ஊற்றி அதற்குச் 'சோழ கங்கம்' எனப்
பெயரிட்டான். இந்த ஏரியின் பக்கத்துள்ளோர் இதனைப் பொன்னேரிஎன்று
இப்போது வழங்குகின்றனர்.
குலோத்துங்கன் சோழமண்டலத்தில் முடி சூடுதல்
சமயத்தில் வந்தமைக்குப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள். சோழர் மரபில் முடி
சூடுதற்குரிய அரசகுமாரர் எவருமில்லாமையாலும்
கங்கைகொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் பேரனாம் உரிமை இவனுக்கிருத்தலாலும் இவ்விராசேந்திரனே சோழநாட்டின் அரசனாக முடிசூடும் உரிமையுடையோன் எனவும் உறுதிசெய்தனர். அங்ஙனமே இவனுக்கு முடிசூட்டுதற்குத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன, கி. பி. 1070-ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் இவன் முறைப்படி முடிசூட்டப்பெற்றான். அந்நன்னாளில் இவன் குலோத்துங்க சோழன் என்னும் பெயரும் எய்தினான்.
அறுகெடுத்திட்டு வணங்கினர் ; அந்தணர் 'அரசர் பெருமான் நீடு வாழ்க' என்று
வாழ்த்தினர் ; மனுநெறி எங்கும் தலையெடுக்கவே இவன் புகழ் யாண்டும்
பரவுவதாயிற்று.
0 تعليقات