TNPSC Study Material-Current Affairs in
Tamil:Poverty Index
Tnpsc Group 2 Current Affairs :
UNDP ஆல் சமீபத்தில் வெளியிடப்பட்ட Multidimensional Poverty Index(MPI) ல் இந்தியா 66வது இடத்தை பெற்றிருந்தது.
இந்தியாவின் Think Tank எனப்பட கூடிய NITI AAYOG இந்திய மாநிலங்களுக்கான MPI அறிக்கையை வெளியிடுகிறது.
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL 2021-2022
இந்த அறிக்கை பல முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கிறது. அவற்றில் சிலவற்றை காணலாம்.
1) இந்தியாவில் 25.01% மக்கள் ஏழைகள்.
2)கேரளா 0.7 % ஏழைகளை கொண்டுள்ளது.
3)தமிழ்நாடு 4.9 % ஏழைகளை கொண்டுள்ளது.
4)பீகார் அதிகபட்சமாக 51.9% ஏழைகளை கொண்டுள்ளது.
5)கோட்டயம் மாவட்டம் இந்தியாவின் ஏழைகளற்ற ஒரே மாவட்டமாக பதிவாகியிருக்கிறது..
*Kerala Model of Development* என்கிற சொல்லாடல்கள் நல்ல வளர்ச்சி நிலைக்கு உதாரணங்களாக சொல்லப்படுகின்றன..
அதன் பின்னனி விரிவாக பேசப்படவேண்டிய ஒன்றாகும்..
தற்போது சில பொதுவான கரணங்களை காணலாம்.
கல்வி - அதிகமான முதலீடு இதில் மேற்கொள்ள படுகிறது. 2020-21 ல் கேரளா 14.6 % கல்விக்காக நிதி ஒதுக்கியது . இது மற்ற மாநிலங்களை விட அதிகம்.
கோட்டயம் - இந்தியாவில் முதல் கல்லூரி கிரித்தவ மிஷனரிகளால் கோட்டயத்தில் தான் தொடங்கப்பட்டது. 1989 லேயே 100% கல்வியறிவு பெற்ற மாவட்டமாக இது வளர்ச்சி கண்டுவிட்டது அன்று முதல் கவனமாக அதன் வளர்ச்சிக்கு வித்திட்டது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம்..
அடுத்ததாக அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்புகளை கூறலாம்..
* அனைத்து நாட்களிலும் பசியுள்ளவர்களை தேடி பசி தீர்க்க கல்லூரி மாணவர்கள் முதல் பல அமைப்புகள் இயங்கி வருகின்றன .
பெண்களுக்கு பாகுபாடற்ற கல்வி அனைத்து நிலைகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோட்டயம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் 100% மக்கள் நல அமைப்பாக அவர்களை நெருங்குகின்றனர். எனவே தரமான நல் ஆளுகையும் உறுதி செய்யபடுகிறது.
0 Comments