Header Ads Widget

Kapadapuram (Tamil Historical Novel) By N.Parthasaarathy-Pdf Free Download

 

 

 

   Kapadapuram (Tamil Historical Novel) By 

     N.Parthasaarathy-Pdf Free Download

 

 
Tamil writers of the present period have written fictional novels on the history of the ancient Tamils ​​.These are fictional and fictional Tamil historical novels based on the Sangam literature on the history of the Tamils ​​and their way of life .Thus the historical novel written in Tamil is Na.Parthasaarathy
 

 பழந்தமிழர்களின் வரலாறுகளை இன்றைய காலகட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் கதை வடிவில் புனையப்பட்ட நாவல்களாக எழுதியுள்ளனர் .இவை தமிழர்களின் வரலாறுகளை அவர்களின் வாழக்கை முறையை சங்க இலக்கியங்களை அடிப்படையாக கொண்டும் சிறிது சுவாரஸ்யத்திற்காக கற்பனை மற்றும் புனையப்பட்டும் தமிழ் வரலாற்று நாவல்கல் எழுதுகின்றனர் அவ்வாறு தமிழில் பாண்டியர்களின் துறைமுக நகரமான கபாடபுரத்தை பற்றி  புனையப்பட்ட எழுதப்பட்ட வரலாற்று நாவல் தான் ந .பார்த்தசாரதியின் கபாடபுரம் ஆகும்.


கபாடபுரம்‌ (சரித்திர நாவல்‌):Best Historical Story Books In Tamil


தமிழ்‌ இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள்‌ விரிவாக எழுதாததும்‌, கடல்‌ கொண்டு
மறைத்த மிகப்‌ பழங்காலத்தைச்‌ சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில்‌ இந்தக்‌ கதை நிகழ்கிறது. இன்றும்‌ தமிழ்‌ மொழிக்குப்‌ பெருமையளித்துக்‌ கொண்டிருக்கிற மாபெரும்‌ இலக்கண இலக்கியங்களும்‌, பேராசிரியர்களும்‌, என்றோ உருவாகி உறவாடி - வளர்த்த, வாழ்ந்த ஒரு பொற்காலம்‌ இந்தக்‌ கதையில்‌ சொற்‌ கோலமாக வரையப்‌ படவிருக்கிறது. தமிழ்‌ மக்கள்‌ தங்களுடைய கடந்த காலத்தின்‌ பெருமைகுரிய நிகழ்ச்சிகள்‌ நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப்‌ படிக்கிறோம்‌ என்ற பெருமிதத்தோடும்‌, ஏக்கத்தோடும்‌ இந்தக்‌ கதையைப்‌ படிக்கலாம்‌. ஏக்கத்தை மறுபுறமாகக்‌ கொள்ளாத தனிப்‌ பெருமிதம்‌ தான்‌ உலக வரலாற்றில்‌ ஏது?

சோழர்களின்‌ புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப்‌ பூம்பட்டினத்தைப்‌
போன்றதும்‌ - அதற்குப்‌ பல்லாயிரம்‌ ஆண்டுகள்‌ முற்பட்டதுமாகிய பாண்டியர்களின்‌ துறைமுகத்‌ தலைநகரான கபாடபுரத்தைப்‌ பற்றி இன்று நமக்கு அதிகமாகத்‌ தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழரசர்கள்‌ மூவருமே கடல்‌ வாணிகம்‌, திரைகடலோடிப்‌ பயணம்‌ செய்து வளம்‌ சேர்த்தல்‌, ஆகிய
குறிக்கோள்களுடையவர்களாயிருந்ததனால்‌ கடலருகில்‌ அமையுமாறே தங்கள்‌ கோநகரங்களை ஏற்படுத்திக்‌ கொண்டிருந்தார்கள்‌. . இதன்‌ பின்பே பாண்டியர்களின்‌ தலைநகர்‌ மதுரைக்கு மாறியது. கபாடபுரம்‌ அழிந்த பின்னரும்‌ சோழர்கள்‌ அதிர்ஷ்டசாலிகளாகவே இருந்தனர்‌. ஏனென்றால்‌ கபாடபுர நகரம்‌ கடல்‌ கொள்ளப்பட்ட பல தலை முறைகளுக்கும்‌ பற்பல ஆண்டுகளுக்கும்‌ பின்பு கடைச்‌ சங்க காலத்திற்கும்‌ கூடக்‌ காவிரிப்பூம்பட்டினம்‌ சோழ நாட்டுப்‌ புலவர்கள்‌ பாடும்‌ இலக்கிய நகராக இருந்தது.


பாண்டியர்களின்‌ பொன்‌ மயமான - பொலிவு மிகுந்த இராச கம்பீரம்‌ நிறைந்த
கபாடபுரமோ இடைச்‌ சங்கத்து இறுதியிலேயே அழிந்து கடலுக்கிரையாகி விட்டது. பட்டினப்‌ பாலையும்‌, சிலப்பதிகாரமும்‌, காவிரிப்பூம்பட்டினம் பற்றிய வரலாற்றை கூறுகிறது

 சோழர்களின்‌ கோநகராயிருந்து கடல்‌ கொள்ளப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்தைப்‌ பற்றி  'மணிபல்லவம்‌' - என்ற
பெயரில்‌ ஒரு வரலாற்றுப்‌ பின்னணியுடைய நாவல்‌ .உள்ளது

 

Kapadapuram (Tamil Historical Novel) By N.Parthasaarathy-Pdf Free Download
best historical novels in tamil pdf

 

 

பாண்டியர்களின் துறைமுக நகரமான கபாடபுரம்‌


முதலூழிக்‌ காலத்தில்‌ குமரிக்‌ கண்டத்தில்‌ குமரியாற்றங்கரையில்‌ இருந்த
தென்மதுரைத்‌ தமிழ்ச்‌ சங்கமும்‌ பாண்டியர்‌ கோநகரமும்‌ பல்லாயிரம்‌ ஆண்டுகள்‌ சிறப்பாய்‌ அரசாண்டு கடல்‌ கொள்ளப்பட்டு அழிந்த பின்‌ பொருநையாறு கடலொடு கலக்கும்‌ முகத்துவாரத்தில்‌ கபாடபுரம்‌ என்ற புதிய கோநகரைச்‌ சமைத்து ஆளத்‌ தொடங்கினார்கள்‌ பாண்டியர்கள்‌.

முத்தும்‌ இரத்தினமும்‌ ஏற்றுமதி செய்து - அற்புதமான பலவகைத்‌ தேர்களைச்‌
சமைத்து - இலக்கண இலக்கியங்களைப்‌ பெருக்கி இந்த நகரை உலகெலாம்‌ புகழ்‌ பெறச்‌ செய்த முதல்‌ பாண்டிய மன்னன்‌ வெண்தேர்ச்‌ செழியன்‌. பாண்டியர்களின்‌ தேர்ப்படை, இவன்‌ காலத்தில்‌ அற்புதமாக வளர்ந்து உருவாக்கப்பட்டது. கபாடபுரத்தின்‌ பெயர்‌ பெற்ற வெண்முத்துக்கள்‌ பதித்த பல அழகிய இரதங்கள்‌ இவனுக்குரியனவாயிருந்தன என்று தெரிகிறது. வெண்முத்துக்கள்‌ பதிக்கப்‌ பெற்று ஒளி வீசும்‌ பிரகாசமான ரதங்களில்‌ வெள்ளை மின்னல்கள்‌ போலும்‌ ஒளிமயமான பல புரவிகளைப்‌ பூட்டி இவன்‌ அமைத்திருந்த தேர்ப்படையே இவனுக்குப்‌ பின்னாளில்‌ இலக்கிய ஆசிரியர்கள்‌ 'வெண்தேர்ச்‌ செழியன்‌' என்று சிறப்புப்‌ பெயரளிக்கக்‌ காரணமாயிருந்தது. கபாடபுரம்‌ என்ற நகரைப்‌ பொருத்தமான இடத்தில்‌ உருவாக்கிய
பெருமையும்‌ தேர்ப்படையை வளர்த்த பெருமையும்‌ வெண்தேர்ச்‌ செழியனையே சேரும்‌. இவ்வரசன்‌ கபாடபுரத்தில்‌ அமைத்த தமிழ்ச்‌ சங்கமாகிய இடைச்‌ சங்கத்தில்‌ ஐம்பத்தொன்பது தமிழ்ப்‌ பெரும்‌ புலவர்கள்‌ இருந்தனர்‌. நூலாராய்ந்தனர்‌.



CLICK HERE PDF :Kapadapuram (Tamil Historical Novel) By N.Parthasaarathy-Pdf Free Download







Post a Comment

0 Comments