*இந்திய கடலோரக் காவல்படை தினம்*
1978ல் துவங்கப்பட்டு 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள
உலகின் நான்காவது பெரிய கடலோர காவல் படையான, இந்திய கடலோர காவல் படை, இந்திய கடலோர பகுதிகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
மேலும், இந்திய கடல்சார் மண்டலத்தில் விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது.
*நாங்கள் பாதுகாக்கிறோம்* என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படை, தொடங்கப்பட்டதினம் இன்று.
இந்திய கடலோர காவல்படை குடும்பத்தினருக்கு அவர்களின் எழுச்சி நாள் வாழ்த்துக்கள்.
பெரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பான, எங்கள் கடலோரக் காவல்படையானது, நமது கடற்கரைகளை உறுதியுடன் பாதுகாப்பதுடன், மனிதாபிமான முயற்சிகளிலும் முன்னணியில் இருக்கும் வல்லுநர்களின் சிறந்த குழுவாகும். -NARENDRA MODI PM
1 تعليقات
أزال أحد مشرفي المدونة هذا التعليق.
ردحذف