எங்கள் கனா-
இது இஸ்ரோவின் கதை. அந்நிய தேசங்களின் வஞ்சம் உடைத்து இந்தியா நெஞ்சம் நிமிர்ந்த கதை. இதில் நம் தேசம், அரசியல் நிகழ்வுகள், அமெரிக்க வஞ்சம், விண்வெளி, ஏலியன் என அனைத்தும் இருக்கும்.
இது புனைவல்ல. மனித வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை சுவாரசியப் புள்ளிகளால் இணைத்திருக்கிறேன். நேரம், காலம், பெயர்கள் குறிப்பிட்டிருக்கிறேன். அனைத்தும் நிஜம். இறுதி நிமிடங்களைத் தவிர!
ரோலர்கோஸ்டரில் பயணித்திருப்பீர்கள்! ஏறுமுன் எத்தனை பிரச்சினை, சிக்கல்கள், மனஸ்தாபங்கள், துயரங்கள் இருந்தாலும், கோஸ்டர் மெதுவாக நகர்ந்து, மேலேறி, செங்குத்தான ஓர் உச்சியை அடையும் போது அனைத்தும் மறந்து போய் அட்ரினலின் தேகமெங்கும் சுரக்கும். செல்கள் அனைத்தும் சில்லிட்டு நிற்கும். ஊடல்கள் மறந்த கைகள் தாமாகப் பற்றிக் கொள்ளும். கோஸ்டர், கீழ் நோக்கி, அதி வேகத்தில் பாயும் போது பூமி வயிற்றில் புரளும்.
சிரிப்பும், அலறலும், நெகிழ்வும், மகிழ்வுமாய், கரம் பற்றி கண்ணீர் வழியக் குதூகலிப்போம். இது அனைத்தையும் இப்புத்தகம் நிகழ்த்தும்.
CLICK HERE PDF;-எங்கள் கனா
0 Comments