மன்னாதி மன்னர்கள்- இ எஸ் லலிதாமதி
பண்டைய தமிழகத்தில் காதலும், வீரமும் இரு கண்களாகப் போற்றப்பட்டன. அதனால்தான் அகத்தை மையமாகக் கொண்டு அகநானூறு என்றும் புறத்தை மையமாகக் கொண்டு புறநானூறு என்றும் இலக்கியத்தை இரு பிரிவுகளாக்கி தந்துள்ளனர் நம் முன்னோர்.
வீரம் பெரிதும் போற்றப்பட்டதால் அரசர்கள் அடிக்கடி போர் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். காரணம் ஏதும் இல்லாவிட்டாலும் கூட வலியச் சென்று சண்டையிடும் பழக்கமும் அக்காலத்தில் இருந்திருக்கிறது. பிறந்த குழந்தை இறந்து விட்டாலும்கூட அக்குழந்தையின் உடலில் வாளால் காயம் ஏற்படுத்திய பிறகு அடக்கம் செய்யும் பழக்கத்திலிருந்தே வீரத்துக்கு அன்றைய சமூகத்தில் இருந்த முக்கியத்துவத்தை உணர முடிகிறது.
போர்க்களம் புகாத மன்னனை மக்கள் மதித்ததில்லை. புலவர்கள் போற்றிப் புகழ்ந்ததில்லை. ஆகையால் புகழ் நாடிய மன்னர்கள் போர் புரிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். அத்துடன் போரில் முகத்திலும் மார்பிலும் பட்ட காயங்களையே வீரத்துக்குக் கிடைத்த பரிசாகவும், பிற உறுப்புகளில் படும் காயங்கள் இழுக்காகவும் கருதப்பட்டன.
இது போன்ற காரணங்களினால் பண்டைக் காலத்தில் போர் அதிகம் நிகழ்ந்ததென்று கொள்ளலாம்.
மார்பில் பட்ட காயத்தைக் கூட சில மன்னர்கள் மருந்து கொண்டு ஆற்றாமல் மானம் கருதி உயிர் விட்ட நிலையும் இருக்கவே செய்கிறது. வஞ்சகம், சூழ்ச்சி போன்ற காரணங்களினால் மன்னர்கள் மாண்ட கதையும் நம் மனத்தை அறுக்கவே செய்கிறது. அப்படி இறந்த மன்னர்களில் பாரி, அதியமான், ஆதித்த கரிகாலன், இராஜாதேசிங்கு போன்றோரைக் குறிப்பிடலாம்.
இக்கால வளரிளம் பருவத்தினர் கணினி, கைபேசியை தெரிந்து கொள்வதற்கு செலுத்தும் ஆர்வத்தில் சிறிதை நம் மொழி, பண்பாடு, நாகரிகம், வரலாறு என்று தெரிந்து கொள்வதில் சிறிதேனும் அக்கறை காட்டுதல் நலம்.
நம் தாய் தந்தையர் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோமோ அதே அளவு நம் முன்னோர் பற்றிய வரலாற்றையும் நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
CLICK HERE PDF ;- மன்னாதி மன்னர்கள்- இ எஸ் லலிதாமதி
0 Comments