சோழர் சரித்திரம்-ந.மு. வேங்கடசாமி நாட்டார்
சோழர் சரித்திரம்'' என்ற இந்த நூலை ஆக்கியவர் நாவலர் பண்டித் ந.மு. வெங்கடசாமி நாட்டார் அவர்கள். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் அன்னையின் தவப் புதல்வராகிய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் தலைமையின் கீழ் நடந்த பேரவையில் '' சோழர் சரித்திரம்'' என்ற பொருள் பற்றி நூலாசிரியர் சொற்பொழிவாற்றினார். அதை அவைத்தலைவர் பெரிதும் பாராட்டினார். அந்தச் சொற்பொழிவை செப்பம் செய்து 1928-ல் நூல்வடிவில் நாட்டார் அவர்கள் வெளியிட்டார்.
கடல்கொண்ட குமரி( லெமூரியா ) கண்டம் பற்றி ஆய்வாளர்கள் கூறியுள்ளது பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடக்கில் வேங்கடமும் தெற்கில் குமரி ஆறும் கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லையாகவுடைய நிலமே தமிழகம் எனப்படுவதாயிற்று என்றும் இவ்வெல்லையிலிருந்து ஆட்சி புரிந்தவர்களே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் என்றும் நூலாசிரியர் கூறுகிறார். ( பல்லவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண்டனர்) தமிழ் வேந்தர்கள் பற்றிய இராமாணம், மகாபாரதக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றியும் எடுத்துக்காட்டுகிறார்
0 تعليقات