Header Ads Widget

நித்திலவல்லி-நா.பார்த்தசாரதி-தமிழ் வரலாற்று சரித்திர நாவல் Pdf

 

 

Tamil Historical Novels Pdf:

 

களப்பிரர்‌ வரலாற்றை பின்னணியாக வைத்து  தீபம்  நா.  பார்த்தசாரதியால்  உருவாக்கப்பட்ட தமிழ் வரலாற்று சரித்திர  நாவல் தான் நித்திலவல்லி .  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில்‌ பாண்டிய நாட்டில்‌ நிகழ்ந்த ஒரு சுதந்திரப்‌ போராட்ட வரலாற்று நாவல்‌ தான் நித்திலவல்லி .

.நித்திலவல்லி வரலாற்று புதினம் விகடன் பதிப்பகத்தாரால் 1970  பிரசுரிக்கப்பட்டது  .தமிழக வரலாற்றில்‌ பாண்டிய நாட்டைக்‌ களப்பிரர்கள்‌ கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம்‌ இருண்ட காலம்‌ என்று வரலாற்று ஆசிரியர்களால்‌ கருதப்படுகிறது. இருள்‌ என்பது வெறும்‌ ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும்‌ ஒளியின்மையை மட்டும்‌ இங்கு அப்பதம்‌ குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம்‌, பண்பாடு எல்லாவற்றிலும்‌ இருள்‌ சூழ்ந்திருந்ததையே 'இருண்ட காலம்‌' என்ற தொடர்‌ குறிப்பதாகக்‌ கொள்ள வேண்டும்‌.


சிறப்பான ஒரு வரலாற்று நாவல்‌ புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம்‌
மட்டும்தான்‌ பயன்படும்‌ என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப்‌ போனால்‌ பாண்டியர்களின்‌ இருண்ட காலம்‌ களப்பிரர்களுக்குப்‌ பொற்காலமாகியிருக்கும்‌. நாட்டை மீட்டதன்‌ பின்‌ களப்பிரர்களின்‌ இருண்ட காலம்‌ பாண்டியர்களின்‌ பொற்காலமாக மாறியிருக்கும்‌. ஆகவே இப்படிப்‌ பார்ப்பது கூட பார்க்கும்‌ கோணத்திற்குத்‌ தகுந்தாற்‌ போல்‌ மாறி விடுகிறது. 

 

 

 

நித்திலவல்லி-நா.பார்த்தசாரதி-தமிழ் வரலாற்று சரித்திர  நாவல் Pdf
நித்திலவல்லி-நா.பார்த்தசாரதி-தமிழ் வரலாற்று சரித்திர  நாவல் Pdf

 

 

தேடி இதை எழுத வேண்டியிருந்தது. இந்த ஆராய்ச்சிக்குப்‌ பல பழைய, புதிய
நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக்‌ குறிப்புகளைச்‌ சேகரிக்க நேர்ந்தது.

கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ தொடக்க முதல்‌ ஆறாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர்‌ ஆட்சியில்‌ சிக்கியிருந்ததாகத்‌ தெரிகிறது. இது
தொடர்பான வேள்விக்‌ குடிச்‌ செப்பேட்டுப்‌ பகுதி வருமாறு:-

"களபரனெனும்‌ கலியரசன்‌ கைக்கொண்டதனை
இறக்கியபின்‌ படுகடல்‌ முளைத்த பருதிபோற்‌
பாண்டியாதிராசன்‌ வெளிப்பட்டு விடுகதிர்‌
அவிரொளி விலகவீற்றிருந்து

வேலை சூழ்ந்த வியலிடத்துக்‌

கோவும்‌ குறும்பும்‌ பாவுடன்‌ முருக்கிச்‌
செங்கோல்‌ ஓச்சி வெண்குடை நிழற்‌
றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்‌
பிறர்பால்‌ உரிமை திறவிதின்‌ நீக்கித்‌

தன்பால்‌ உரிமை நன்கனம்‌ அமைத்த

மானம்‌ போர்த்த தானை வேந்தன்‌

ஓடுங்கா மன்னர்‌ ஒளிநகர்‌ அழித்த
கடுங்கோன்‌ என்னும்‌ கதிர்வேல்‌ தென்னவன்‌."
 

டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின்‌ பாண்டிய வரலாறு - பக்கங்கள்‌ - 33, 34, 35, 36, 37

இனி இலக்கிய ஆதாரங்கள்‌ வருமாறு:-

கானக்‌ கடிசூழ்‌ வடுகக்கரு நாடர்‌ காவல்‌

மானப்‌ படைமன்னன்‌ வலிந்து நிலங்கொள்வானாய்‌
யானைக்‌ குதிரைக்‌ கருவிப்படை வீராதிண்‌ டேர்‌
சேனைக்‌ கடலுங்‌ கொடுதென்‌ திசைநோக்கி வந்தான்‌.
வந்துற்ற பெரும்படை மண்புதையப்‌ பரப்பிச்‌

சந்தப்‌ பொதியில்‌ தமிழ்‌ நாடுடை மன்னன்‌ வீரம்‌
சிந்திச்‌ செருவென்று தன்‌ ஆணை செலுத்தும்‌ ஆற்றல்‌
கந்தப்‌ பொழில்சூல்‌ மதுராபுரி காவல்‌ கொண்டான்‌.

(திருத்தொண்டர்‌ புராணம்‌ மூர்த்தி... 1, 12)

படைநான்‌ குடன்று பஞ்சவன்‌ துரந்து
மதுரை வவ்விய கருநடர்‌ வேந்தன்‌
அருகர்ச்‌ சார்ந்துநின்‌ றரன்பணி யடைப்ப

(கல்லாடம்‌ - 56)

இந்த இலக்கிய ஆதாரங்களைத்‌ தவிர,
பல்லவர்‌ வரலாறு - டாக்டர்‌ இராசமாணிக்கனார்‌
பாண்டிய வரலாறு - டி.வி. சதாசிவ பண்டாரத்தார்‌
504 [ஈ௦கா ஈ5௦ர0 14௦5 (4/0)
1/ண்ஙற வ (4/0)
லஞ்ச (8ா௦0௦௱ - (64. 116554800௪ 510
சாஸனத்‌ தமிழ்க்கவி சரிதம்‌ - மு. ராகவையங்கார்‌
ஆராய்ச்சிக்‌ கட்டுரைகள்‌ - மு. ராகவையங்கார்‌
பரிபாடல்‌
புறநானூறு
கலித்தொகை
பெருந்தொகை

தமிழ்‌ இலக்கிய வரலாறு |, || - கே.எஸ்‌.எஸ்‌. பிள்ளை

ஆகியவற்றிலிருந்து இதற்கான ஆதாரங்கள்‌ கிடைத்தன. 


கதையில்‌ வரும்‌
கதாபாத்திரம்‌ மதுராபதி வித்தகர்‌ ,செல்வப்‌ பூங்கோதை , இரத்தினமாலை. இளையநம்பிதான்‌ கதாபாத்திரங்களில்‌ முதன்மையானவன்‌ என்கிறார்கள்‌ மற்றும்‌ பலர்‌. அழகன்‌ பெருமாள்‌, மல்லன்‌, கொல்லன்‌, யானைப்பாகன்‌ அந்துவன்‌, காராளர்‌



CLICK HERE PDF:நித்திலவல்லி-நா.பார்த்தசாரதி-தமிழ் வரலாற்று சரித்திர  நாவல்(Tamil Historical Novels ) Pdf

 

CLICK HERE PDF:PART -2 

 

CLICK HERE PDF : PART -3

Post a Comment

0 Comments