Header Ads Widget

RAJAKESARI- இராஜகேசரி கோகுல்-சேஷாத்ரி-FREE PDF

 



                RAJAKESARI- இராஜகேசரி கோகுல்-சேஷாத்ரி-FREE PDF




இப்புதினத்தின் கதைநிகழ் காலம் கிபி 1003. ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளன்று விமரிசையான கொண்டாட்டத்திற்குத் தயராகிக் கொண்டிருந்தது சோழர் தலைநகரம்.. அரசரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள, நாட்டின் பிறபகுதிகளிலிருந்து மக்கள் தலைநகரை நோக்கி வந்து குவிந்தனர்.









ஓராண்டுக்கு முன் ராஜராஜனால் திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்ட ராஜராஜேஸ்வரம் (பிரகதீசுவரர் கோயில்) உருவாகிக் கொண்டிருந்தது. . பெரிய பெரிய கற்கள் யானைகளால் இழுக்கப்பட்டப் பாரவண்டிகளிலிலிருந்து இறக்கப்பட்டன. திட்டத் தலைமைக் கணக்கர் ஆதித்தன் சூரியன்,  அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பல வகையான பணிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். சிற்பிகள், சித்திரக்காரர்கள், தொழில் வல்லுநர்கள், சமயக் குரவர்கள் என பலதுறை வல்லுநர்களால் நிறைந்திருந்தது அந்த வளாகம். கடவுளுக்குப் பணிசெய்ய தேவரடியார் எனப்படும் 400 நடன மங்கையர் நாட்டின் பலபாகங்களிலிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருந்தனர். பிறந்த நாள் விழாவில் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட “ராஜராஜ விஜயம்” என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற விஜயராஜ ஆச்சாரியரின் தலைமையில் முனைப்பாக ஒத்திகைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தன


சோழநாட்டின் தலைநகரம் இவ்வாறு பிறந்த நாள் விழாக் கொண்டாட்ட ஏற்பாடுகளில் மகிழ்ச்சியோடு மூழ்கியிருக்க,


 பலநூறு காதங்களுக்கு அப்பால், சேரநாட்டு எல்லைகுட்பட்ட காட்டுப்பகுதியில் ராஜராஜ சோழனுக்கு எதிராக சதித் திட்டம் உருவானது. சதித்திட்டத்தை நிறைவேற்றச் சதிகாரர்கள் சோழர் தலைநகருக்குள் ஊடுருவி தக்க தருணத்தை நோக்கிக் காத்திருந்தனர். அதே சமயம் போரில் ஏற்பட்ட காயத்தால் படையிலிருந்து விலகி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மூத்த வீரன் கண்முன் ஒருவன் கொலை செய்யப்படுகிறான். கொலையுண்டவன் இறக்குமுன் அவ்வீரனிடம் சோழ அரசனைக் கொல்ல உருவாகும் சதியைப் பற்றித் தெரிவித்துவிட்டு மாண்டு போகிறான். 



அதன் பின் அவ்வீரன் அரசியல் சதிச் சூழலில் சிக்கி மேற்கொள்ளும் பயணமும் விளைவுகளுமே இக்கதை.




CLICK HERE PDF;-RAJAKESARI- இராஜகேசரி கோகுல்-சேஷாத்ரி-FREE PDF








Post a Comment

0 Comments