Header Ads Widget

தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?

 




     தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை



பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கேரளத்தில் 8 தொகுப்புகளாக, ஆந்திரத்தில் 6 தொகுப்புகளாக, கர்நாடகத்தில் 5 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் அங்கு அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைக்கிறது!






ஆனால், தமிழ்நாட்டில்  பிற்படுத்தப்பட்ட வகுப்பு 39 ஆண்டுகள் ஒரே தொகுப்பாகவும், வன்னியர்கள் போராட்டத்திற்குப் பிறகு 1989 முதல் 32 ஆண்டுகளாக இரண்டே தொகுப்பாகவும் பிரித்து சமூக அநீதி இழைக்கப்படுகிறது





பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அண்டை மாநிலங்களில் 8, 6, 5 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு 1951 முதல் 1989 வரை 38 ஆண்டுகள் ஒரே பிரிவாக (BC) சுருக்கி வைக்கப்பட்டிருந்ததன் மர்மம் என்ன?




ஆக, இன்றைய சூழலில் சமூகநீதியின் சொர்க்கம் #கேரளம் தான். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில்  இட ஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை கேரளத்தைப் பார்த்து மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ளலாம்!.



இட ஒதுக்கீடு என்பது எப்போதும் ஒரே திடமாக மாறாமல் இருப்பது சமூகநீதி அல்ல. இதை கேரளம் சரியாக புரிந்து கொண்டு அவ்வப்போது இட ஒதுக்கீட்டில் மாற்றங்களை செய்து வருகிறது. அதன்மூலம் அங்கு உண்மையான #சமூகநீதி மலர்கிறது!.




கேரளத்தில் ஏதேனும் ஒரு சாதியின் மக்கள்தொகை இரு விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருந்தால் அவர்களுக்கு தனிப் பிரிவாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்கும் குறைவாக மக்கள்தொகை கொண்ட சாதிகளை மட்டும் இணைத்து 3% ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது!

 

கேரளத்தில் இந்த 8 பிரிவு இட ஒதுக்கீடுகளும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானது தான். பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு  தனியாக 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனால் தான் கேரளத்தில்  அனைத்து சாதிகளுக்கும் முழுமையான சமூகநீதி கிடைக்கிறது!









கேரளத்தில் ஈழவர்களுக்கு 14%, இஸ்லாமியர்களுக்கு 12%, லத்தீன் கிறித்தவர்களுக்கு 4%, நாடார்களுக்கு 2%, கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு 1%, தீரவர்களுக்கு 1%, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3%, விஸ்வகர்மாக்களுக்கு 3% என BC ஒதுக்கீடு 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.



தென்மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அதிகபட்சமாக 8 தொகுப்புகள் வரை பிரித்து வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 1951முதல் 1989ஆம் ஆண்டு வரை ஒரே தொகுப்பாகத் தான் இருந்தது. வன்னியர் சங்கம் போராடியதால்  எம்.பி.சி என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டது.

 



தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34சாதிகள் கல்வி மற்றும் வேலையில் அதிக பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதால், அந்த சமூகங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று அம்பாசங்கர் ஆணையம் பரிந்துரைசெய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்

 

அதேநேரத்தில் பொதுப்போட்டிப் பிரிவில் உள்ள 29 சாதிகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அம்பாசங்கர் ஆணையம் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையை எம்.ஜி.ஆர் அரசு உடனடியாக நிறைவேற்றியது. அதனால் வன்னியர்  உள்ளிட்ட சமுதாயங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன!

 

தமிழகத்தில் BC வகுப்பைச் சேர்ந்த 9 சாதிகள் அரசு வேலைவாய்ப்புகளில் அரசிதழ்ப் பதிவு பெறாத பணிகளில் 37.3%, அரசிதழ்ப் பதிவு பெற்ற பணிகளில் 48.2% விழுக்காட்டையும் பெற்றுள்ளனர். அதனால் பிற சாதிகள் பாதிக்கப்படுவதை தடுக்க தொகுப்பு இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்தது சட்டநாதன் ஆணையம்.



தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 33% ஆக உயர்த்தி  பி.சிக்களுக்கு 17%, எம்.பி.சிகளுக்கு 16% என இரு பிரிவுகளாக பிரிக்கும்படி சட்டநாதன் ஆணையம் பரிந்துரைத்தது. ஆனால், அந்த பரிந்துரைகளை நிராகரித்து வன்னியர்களுக்கு துரோகம் செய்தார் கலைஞர்!

 

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்க்க வேண்டுமானால், அதற்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை தேவை. ஆனால், சட்டநாதன் ஆணையம் பரிந்துரைக்காமலேயே 15 உயர்சாதிகளை பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்து துரோகம் செய்தார் கலைஞர்!



#இடஒதுக்கீடு என்பது பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு சமூகங்களுக்காக பல்வேறு  பிரிவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அது தான் உண்மையான சமூகநீதி ஆகும். 



  தமிழ்நாட்டில் மட்டும் BC இட ஒதுக்கீடு 2 பிரிவுகளாக மட்டும் 

பிரிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக போராட்டம் நடத்திய பிறகு தான் MBC என்ற

இரண் டாவது பிரிவு  ஏற்படுத்தப்பட்டது




8...6...5. இங்கு மட்டும் ஒன்றே ஒன்று? இந்த புதிருக்கு விடை சொல்லுங்கள்







إرسال تعليق

0 تعليقات